'சைவப்புலவர் சு.செல்லத்துரை அறக்கட்டளை நிதியம்' பதிவுசெய்யப்பட்டது!
இளவாலை கிராமத்தைச்சேர்ந்த அண்மையில் அமரத்துவமைடந்த சைவபுலவர் .சு.செல்லத்துரை ஐயா அவர்களின் பெயரினால் அவரால் சைவத்திற்கும் தமிழுக்கு ஆற்றப்பட்ட பணிகளை நினைவுகூர்ந்தும் கௌரவபடுத்தியும் மற்றும் இளவாலை மெய்கண்டான் பாடசாலையில் 25 ஆண்டுகளாக அதிபராக இருந்து பாடசாலயை நல்வழிசெதுக்கியமையை பாராட்டியும் அவரது மாணவர்கள், மெய்கண்டான் பழைய மாணவர்கள், சைவப்புலவரின் அபிமானிகள், உறவினர்கள், கிராம மக்கள், அனைவரது பெரும் முயற்சியால் அங்குராற்பணம் செய்யப்பட்ட 'சைவபுலவர் சு.செல்லத்துரை அறக்கட்டளை நிதியம் இனிதே அண்மையில் பதிவுசெய்யப்பட்டது!
இவ் அறக்கட்டளை சைவப்புலவருக்கு பொருத்தமானதோர் இடத்தில் அவரது திருவுருவசிலையினை நிறுவுவதோடு, அவரது நினைவுநாளில் மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு செயற்திட்டங்களை முன்னெடுத்தல், சமயம் மற்றும் தமிழ்மொழிப் போட்டிகளை நடாத்துதல், மெய்கண்டான் பாடசாலையின் பகுதீகவள முன்னேற்களில் நிதிசார் உதவிகளையும் ,பாடசாலையின் வளர்சிக்கும் இயன்ற பங்களிப்புக்களை நல்கும் நோக்கங்களுடன் உருவாக்கபட்டுள்ளது!
இவ் அறகட்டளைக்கு என நிர்வாகம் ஆலோசனைக்குழு, யாப்பு பிரகடனம், என்பன உருவாக்கபட்டுள்ள நிலையில் இந்த அறக்கட்டளைக்கான வங்கிகணக்கு உருவாக்கும் முயற்சிகளும் ஆரம்பிக்பட்டுள்ளது! வங்கி கணக்கு உருவாக்கப்பட்டதும் சைவபுலவர் சு.செல்லத்துரை அவர்களது மாணவர்கள், உறவினர்கள், அபிமானிகள், கிராம மக்கள், மெய்கண்டான் பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் நிதிபங்களிப்பு வழங்கமுடியும்! அந்நிதிகளின ஊடாக அறக்கட்டளையின் செயற்திட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளது!
கணக்கு இலக்கம் தொடர்பானதும் அறக்கட்டளையின் செய்பாடுகள் தொடர்பானதுமான மேலதிக விபரங்களை விரைவில் அறியத்தருகிறோம்!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.