இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் செயற்பாடுகள்
'சைவப்புலவர் சு.செல்லத்துரை அறக்கட்டளை நிதியம்' பதிவுசெய்யப்பட்டது!
இளவாலை கிராமத்தைச்சேர்ந்த அண்மையில் அமரத்துவமைடந்த சைவபுலவர் .சு.செல்லத்துரை ஐயா அவர்களின் பெயரினால் அவரால் சைவத்திற்கும் தமிழுக்கு ஆற்றப்பட்ட பணிகளை நினைவுகூர்ந்தும் கௌரவபடுத்தியும் மற்றும் இளவாலை மெய்கண்டான் பாடசாலையில் 25 ஆண்டுகளாக அதிபராக இருந்து பாடசாலயை நல்வழிசெதுக்கியமையை பாராட்டியும் அவரது மாணவர்கள், மெய்கண்டான் பழைய மாணவர்கள், சைவப்புலவரின் அபிமானிகள், உறவினர்கள், கிராம மக்கள், அனைவரது பெரும் முயற்சியால் அங்குராற்பணம் செய்யப்பட்ட 'சைவபுலவர் சு.செல்லத்துரை அறக்கட்டளை நிதியம் இனிதே அண்மையில் பதிவுசெய்யப்பட்டது!
இவ் அறக்கட்டளை சைவப்புலவருக்கு பொருத்தமானதோர் இடத்தில் அவரது திருவுருவசிலையினை நிறுவுவதோடு, அவரது நினைவுநாளில் மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு செயற்திட்டங்களை முன்னெடுத்தல், சமயம் மற்றும் தமிழ்மொழிப் போட்டிகளை நடாத்துதல், மெய்கண்டான் பாடசாலையின் பகுதீகவள முன்னேற்களில் நிதிசார் உதவிகளையும் ,பாடசாலையின் வளர்சிக்கும் இயன்ற பங்களிப்புக்களை நல்கும் நோக்கங்களுடன் உருவாக்கபட்டுள்ளது!
இவ் அறகட்டளைக்கு என நிர்வாகம் ஆலோசனைக்குழு, யாப்பு பிரகடனம், என்பன உருவாக்கபட்டுள்ள நிலையில் இந்த அறக்கட்டளைக்கான வங்கிகணக்கு உருவாக்கும் முயற்சிகளும் ஆரம்பிக்பட்டுள்ளது! வங்கி கணக்கு உருவாக்கப்பட்டதும் சைவபுலவர் சு.செல்லத்துரை அவர்களது மாணவர்கள், உறவினர்கள், அபிமானிகள், கிராம மக்கள், மெய்கண்டான் பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் நிதிபங்களிப்பு வழங்கமுடியும்! அந்நிதிகளின ஊடாக அறக்கட்டளையின் செயற்திட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளது!
கணக்கு இலக்கம் தொடர்பானதும் அறக்கட்டளையின் செய்பாடுகள் தொடர்பானதுமான மேலதிக விபரங்களை விரைவில் அறியத்தருகிறோம்!
இளவாலை வைத்தியசாலை வளாகத்தில் இலங்கை வங்கியின் (BOC) பணம் மீளப்பெறும் மற்றும் பணம் வைப்பு செய்யும் CRM இயந்திரம் இன்று முதல் செயற்படத்தொடங்கியுள்ளது!
நூற்றாண்டு விழாவைமுன்னிட்ட மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப்போட்டி!!!
எமது பாடசாலையில் நூற்றாண்டு விழாவின் முதல் நிகழ்வாக தமிழர் வீரபாரம்பரியங்களை பறை சாற்றும் மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி ஏற்பாடாகி உள்ளது!
பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 5 பிரிவுகளை கொண்ட இப்போட்டியில் ஒவொரு பிரிவிலும் முதலிடம் பெறும் வெற்றியாளருக்கு துவிச்சக்கர வண்டியும், 2ம்,3ம்,4ம் இடங்களை பெறும் வெற்றியாளர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசில்களும் வழங்கபடவுள்ளது!
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கபடும்!
எமது இளவாலை கிராமத்தின் வீதி அகலிப்பு மற்றும் மெதுரகவீதி(காப்பற்வீதி) அமைக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது!
நீண்டநாட்களாக செப்பனிடபடாது, கிராம மக்களுக்கு பெரும் சிரமமாக காணபட்ட இவ்வீதி புனரமைப்பு தொடர்பில் எமது சங்கம் உட்பட கிராமத்தின் பொது அமைப்புக்கள், கிராம பற்றாளர்கள், தனிநபர்கள், வடமாகாண ஆளுநர், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என பலரும் தொடர்சியாக வழங்கிய அழுத்தத்தின் பயனாக இவ்வீதி செப்பனிடபடும் வேலைகள் ஆரம்பிக்கபடுகிறது!
வீதி அகலிப்பின் பணிகள் நீண்ட காலங்களின் பின் ஆரம்பிக்கபட்டுள்ள நிலையில் எம்மால் வலி தென்மேற்கு பிரதேச சபை மற்றும் தவிசாளரின் ஆலோசனைகளோடு நடபட்ட மரக்கன்றுகள் சில பாதிப்புக்களாகின்ற போதிலும், வீதி புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும், அதற்கேற்ப மீண்டும் மரக்கன்றுகள் நாட்டபட்டு தொடர்சியாக நீ்ண்டநாள் பராமரித்து பசுமையும், அழகும் மிகு இளவாலை வீதியை அமைப்பதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம்!!!
சார்ந்தோர் அனைவருக்கும் கிராம மக்கள் சார்பான நன்றிகள்!!!!
.இன்றய தீபாவளித்தினத்துடன் எமது சங்கம்7வது ஆண்டினை நிறைவு செய்கின்றது! இந்த நாளில் எமக்கு ஆதரவளித்தும், நிதிப்பெருங்கொடைகள், வழங்கியும் அறிவுரைகள் கூறியும் எமது இந்த வெற்றி நடைக்கு பலமாக இருக்கும் தங்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்!!!தங்கள் ஆசிகளோடும் வாழ்த்துக்களோடும் 8வது ஆண்டில் நம்பிக்கையோடு கால்பதிக்கின்றோம்!!!
நடைபெற்று முடிந்த தரம்-5 புலமைபரிசில் பரீட்சையில் எமது இளவாலை கிராமத்தைச்சேர்ந்த, மகாஜனக்கல்லூரியில் கல்விபயிலும் செல்வி சுபாஸ்கரன் யனுஸ்கா அவர்கள் 198 புள்ளிகளுடன் வடமாகாணத்தில் முதலிடம் பெற்று இளவாலை கிராமத்திற்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்! அவருக்கு எமது சங்கம் சார்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!!!!
புதிய நிர்வாகத்தேர்வு நாளை...எமது சங்கத்தின் நிர்வாகத்தெரிவு ஆண்டுதோறும் நடாத்தபடுவது வழமை. அந்தவகையில் 2020ம் ஆண்டுக்கான 7வது நிர்வாகம் தமது நிர்வாக கடமைகளை இந்நிறைவுசெய்திருக்க நாளையதினம் 8வது ஆண்டுக்கான நிர்வாகத்தெரிவு கூட்டத்தை அறிவித்துள்ளனர்!நாளை இரவு 7மணி கலைமகள் படிப்பகத்தில் 8வது ஆண்டுக்கான நிர்வாகம் தெரிவுசெய்யப்படவுள்ளதாக செயலாளர் அவர்கள் தெரிவித்தார்!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.