இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் செயற்பாடுகள்
10வது ஆண்டில் கால்பதித்திருக்கும் எமது சங்கத்தின் பொங்கல் விழா கொண்டாட்டம் தொடர்பிலான செய்தியை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்!ஆண்டுதோறும் தமிழ்மணக்க கொண்டாடும் பொங்கல்விழாவை இம்முறையும் எதிர்வரும் (08-01-2023). ஞாயிற்கிழமை முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்!அந்தவகையில் ஆரம்ப நிகழ்வாக வடமாகாணரீதியான சைக்கிள் ஓட்டப்போட்டி (08-01-2023) ஞாயி்ற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு இளவாலை சந்தியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது!தொடர்ந்து அன்றைய தினம் முதல் இளவாலை ஆலடிச் சந்தி அருகே யாழ்மாவட்ட தாச்சி சங்கத்தின் அனுமதியோடு 16 அணிகள் மோதும் மின்னொளியிலான தாச்சிப்போட்டிகளும்,அதனை தொடர்ந்து 14-01-2022 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு சித்திரமேழிச் சந்தியிலிருந்து ஆண்களுக்கான மரதனோட்ட போட்டியும் இடம்பெறவுள்ளதோடு,பொங்கல் தினத்தன்று காலை 8.00 மணி முதல் காங்கேசன்துறை வெளிச்சவீட்டருகே மாபெரும் படத்திருவிழா இடம்பெறவுள்ளது! (வழமையான விதிமுறைகள்)பொங்கல் தினத்தன்று மாலை நிகழ்வுகளாக பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகளான கிடுகு பின்னுதல், கயிறுழுத்தல், தலகணைச் சண்டை, சறுக்குமரம்ஏறுதல், தேங்காய் துருவுதல் மற்றும் சிறார்களுக்கான போட்டிகளும் கலைகலாசார நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வுகளுமாக தமிழர் தனிப்பெரும் பண்பாடுகளோடு பொங்கல்விழாவை நடாத்துவதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் கண்டிருக்கிறோம்!தமிழர் திருநாளை கொண்டாடித்தீர்க்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!போட்டிகள் தொடர்பான மேலதிக விபரங்களை விரைவில் எதிர்பாருங்கள்...
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.