இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கதத்தின் கதை...
நகைச்சுவை தனமாக , தென்னிந்திய சினிமாவின் பெயரை நாமமாக கொண்டு பாடல் இயற்றி முகநூலில் பக்கம் ஆரம்பித்து வேடிக்கையென எதர்ச்சியாக கிடைத்த எண்ணத்தின் பிரகாரம் பயனிழந்து கிடந்த பயணிகள் தரிப்பிடத்தை பயணிக்க செய்ய எண்ணி புணரமைத்து "புனரமைக்கிறோம்" என்று முகநூல் பதிவிட்டு புகைப்படம் தரவேற்ற கிடைத்தது ஆயிரமாயிரம் வாழ்த்துக்களும் ஆசிகளும், அவற்றுக்கு நிகராய் கிடைத்தது சமூக விரும்பி என தம்மை அடையாளம் செய்வோரின் கடுப்பேத்தும் வசை சொற்கள்.அந்த தருணத்தில் கிடைத்தது ஒரு உற்சாகமும் புத்துணர்வும் அதுதான் நீடிக்கிறது இன்றை வரைக்கும்.. ஆனால் நாளடைவில் வசை பேசியவரும் வாழ்த்துக்கள் சொல்ல தொடங்கினர்...
இது அரசியலின் ஆரம்பமோ என ஒருபுறம் சிலர் தலையை பிய்த்துக்கொள்ள, "இளம் சமூகம் இணைந்தது மீண்டும் எதையோ ஆரம்பிக்குமோ?" என புலனாய்வுகள் எம்மை நோட்டமிட எதையுமே கண்டும் காணாததுமாய் தொடர்ந்தது நம் பயணம்.. ஆனால் அவர்கள் பார்வைக்குள் வந்துவிட்டோம் என்பது நாம் வளர்ச்சியின் உச்சம் கண்டோம் என காட்டியது.போதாத குறைக்கு பத்திரிகைகள், தொலை காட்சிகளும் எமை அடியாளபடுத்த உலகறிந்த சங்கமாக உருவேடுத்தோம்..
சேவை எல்லாம் சிறப்பாக இருக்கிறது பெயர் மட்டும் குறை கடிய வைக்கிறது என "பெயர் மாற்று" கோரிக்கைகள் ஆரம்பத்தில் எம்மை தொடர "எம்மை இப்படியே ஏற்று கொள்பவர்கள் மாத்திரம் ஏற்று கொள்ளுங்கள்" என விடாப்படியாக நாம் இருக்க நாளடைவில் "பெயர் மாற்ற" கோரிக்கைகள் சென்ற இடம் தெரியாமல் தொலைந்தது...
இவ்வாராய் வளர்ச்சி கண்டு இன்று இலங்கையின் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடமாகணம் எங்கும் எமது சேவையை விஸ்தி கரித்து சார்வதேச புகழ் நிறை சங்கமாக உருவெடுத்து தேவைகள் இருக்கும் இடம் எங்கும் எமது சேவை நாமம் தனை பொறித்து வாலிபத்தின் ஆரோக்கியத்தை வான் பிளந்து உரைக்கும் சங்கமாக எங்கள் பணயணத்தை இனிதே தொடர்கிறோம்..
தொடர்ந்தும் எமது பயணம் இமாலயம் காண தங்களின் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் உங்கள் பிள்ளைகளான நாம் எதிர் பார்க்கிறோம்
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.