இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் செயற்பாடுகள்
இந்த முகநூல் பக்கத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. மாறாக இங்கே நாம் புகைப்படங்களையும் அவை தொடர்பான விபரங்களையும் பதிவிடுவதன் மூலமாக எம்மீது நிதி நன்கொடையாளர்களுக்கு நம்பிக்கையும் ஆர்வமும் ஏற்படலாம். எனவே அவர்கள் எமது சங்கத்திற்கு மேலும் நிதி நன்கொடைகளை தர முன்வருவர். இதன் வாயிலாக எமது சேவை பயணத்தை இனிதே நாம் தொடரலாம். மேலும் சில புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் போரால் பாதிக்க பட்ட தாயகத்து உறவுகளுக்கு உதவுவதற்கு ஆர்வமாக உள்ள பொழுதிலும் , யார் மூலமாக இதனை முன்னெடுப்பது என்ற நடைமுறை சிக்கல்களாலும், நம்பிக்கையீனத்தாலும் தங்கள் உதவும் முயற்சிகளை கைவிட்டுள்ளனர். எனவே அவர்களும் இந்த பக்கத்தின் வாயிலாக எமது சேவைகளை அறிந்து எம்மை தொடர்பு கொண்டு குறித்த உதவித்திட்டங்களை நேரடியாகவோ அல்லது எம் ஊடாகவோ முன் எடுக்க இலகுவாக இருக்கும். இந்த பக்கத்தின் மூலமாக இது போன்ற பலர் எம்மை தொடர்புகொண்டு குறித்த உதவித்திட்டங்களை முன்னெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
10வது ஆண்டில் கால்பதிக்கும் சங்கத்தின் தீபாவளிக் கொண்டாட்டத்தில் குதூகலிக்க தயாராகுங்கள்....
எமது சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இரத்ததானமுகாங்களின் வரிசையில் 18வது இரத்தானமுகாம் எதிர்வரும் சனிக்கிழமை (04-12-2021) காலை 8.30 மணிதொடக்கம் மாலை 2.30 மணிவரை இடம்பெறவுள்ளது!அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.