இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் செயற்பாடுகள்
கிளி-வன்னேரிக்குளத்தைச் சேர்ந்த போரில் ஒரு மகனை இழந்தும், மற்றுமோர் பிள்ளை காணாமலாக்கப்பட்டுமுள்ள நிலையில் தனித்துவாழ்ந்து வரும் தாயார் ஒருவரின் வீடு திடீரென தீப்பற்றி எரிந்து உடைகள், உணவுப்பொருட்கள், பாத்திரங்கள் அனைத்தும் நாசமாகிய நிலையில் எந்த உதவிகளும் குறித்த தாயாருக்கு கிடைக்காமையினை அறிந்து; எமது சங்க உறுப்பினர்கள் விசேட கவனமெடுத்த நிலையில் ரூபா 17000/= பெறுமதியான பொருட்கள், உடைகள், உணவுப்பொருட்கள், என்பன உடனடியாக இன்று காலை நேரில் கொண்டுசென்று வழங்கிவைக்கப்பட்டது!
இதற்கான நிதிபங்களிப்பை புலம்பெயர் தேசத்தில் (UK) வாழ்ந்துவரும் திரு.கஜீபன் கண்ணதாசன் அவர்கள் நாம் கேட்டதற்கு இணங்க உடனடியாக வழங்கி இருந்தார். அவருக்கு எமது சங்கம் சார்பான நன்றிகள்!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.